முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியின் வருகையொட்டி பல்லடத்தில் ஹெலிகாப்டர் ஒத்திகை : திருப்பூரில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2024      தமிழகம்
Modi 2023-08-21

Source: provided

திருப்பூர் : பல்லடத்தில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி வருகை தரவுள்ளதையொட்டி பல்லடத்தில் நேற்று ஹெலிகாப்டர் ஒத்திகை நடைபெற்றது. மேலும் பிரதமரின் வருகையை முன்னிட்டு இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதித்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் வருகிற 27-ம் தேதி பா.ஜ.க. சார்பில் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார். 

இதற்காக கேரளாவில் இருந்து கோவை மாவட்டம் சூலூர் விமானப் படை தளத்திற்கு வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் மாதப்பூர் மைதானத்திற்கு செல்கிறார். இதற்காக அங்கு ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து நேற்று காலை மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் சூலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட விமானப்படை ஹெலிகாப்டரை இறக்கி சோதனை நடத்தப்பட்டது.  

இந்த நிலையில் பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக திருப்பூர் மாவட்ட காவல் எல்லையில் இன்று 26 மற்றும் நாளை 27-ம் தேதி ஆகிய 2 நாட்கள் எவ்வித டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதித்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா உத்தரவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து