முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடியில் மின் வாகன தொழிற்சாலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2024      தமிழகம்
CM-2 2023-02-25

Source: provided

தூத்துக்குடி : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் பொருட்டு புதிய தொழிற்சாலைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக தென் மாவட்டங்களில் உள்ள சிப்காட் பகுதிகளில் தொழில் வளங்களை பெருக்கி அதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறார். நெல்லை, தூத்துக்குடி சிப்காட் பகுதிகளில் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுகிறது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் தமிழக அரசு சார்பில் தொழிற்சாலைகள் தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த வகையில் தென் மாநிலத்தில் முதல்முறையாக தூத்துக்குடியில் முதல் மின் வாகன தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தை வியட்நாமை சேர்ந்த பிரபல நிறுவனமான வின் பாஸ்ட் தொடங்க உள்ளது. இதற்காக தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் வளாகத்தில் 400 ஏக்கர் நிலபரப்பில் மின் கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. 

இந்த தொழிற்சாலையில் ஆண்டு ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் மின் வாகனங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  வின் பாஸ்ட் மின் கார் தொழிற்சாலை அமையவுள்ள இடத்தின் நுழைவுவாயில்.ரூ. 16 ஆயிரம் கோடி முதலீட்டில் தொடங்கப்படும் இந்த தொழிற்சாலையில் முதற்கட்டமாக 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். 

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த புதிய மின் கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடி சில்லா நத்தத்தில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு புதிய கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். 

விழாவில் சபாநாயகர் அப்பாவு, கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, கீதாஜீவன், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மனோ தங்கராஜ், ராஜ கண்ணப்பன், ஞானதிரவியம் எம்.பி., வின் பாஸ்ட் நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைமை செயல் அலுவலர் பாம் சான் சவு, துணை தலைமை செயல் அலுவலர் பார்த்தா டட்டா, கலெக்டர் லட்சுமிபதி, சிப்காட் நிர்வாக இயக்குனர் செந்தில்ராஜ் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் மார்கண்டேயன், சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டை சூசைபாண்டியாபுரம் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு கடந்த டிசம்பர் மாதம் நெல்லை, தூத்துக்குடியில் பெய்த கனமழையால் வீடுகளை இழந்தவர்கள், வீடு சேதம் அடைந்தவர்கள், படகுகள் சேதம் அடைந்த மீனவர்கள் என 16 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இந்த விழாக்களில் கலந்து கொள்வதற்காக முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். வாகைகுளம் விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலும் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதே போல் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் இருந்து விழாக்கள் நடைபெற்ற பகுதிகளுக்கு செல்லும் வழியில் சாலைகளில் இருபுறமும் தி.மு.க.வினரும், பொதுமக்களும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர். முதல்வரின்  வருகையையொட்டி தூத்துக்குடி முழுவதும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து