முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச விருதுகளை அள்ளிய வீரத்தின் மகன்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2024      சினிமா
Veerathin-son 2023-02-26

Source: provided

15வது நார்வே தமிழ்த் திரைப்பட விழாவிற்கு தேர்வான 20 படங்களுக்கு தமிழர் விருது “புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் விருது” என்ற பெயரில் வழங்கவுள்ளதாக விழா இயக்குநர் வசீகரன் சிவலிங்கம் அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் தமிழ் திரைப்படங்களில் சிறந்த படங்களை தேர்வு செய்து தமிழர் விருதுகளை நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் வழங்கப்படுகிறது. 14 ஆண்டுகளாக மிகவும் சிறப்பாக நடைபெற்றுவரும் இத்திரைப்பட விழா பிரம்மாண்ட விழாவாக உலக நாடுகளின் வரவேற்பை பெற்று வருகின்றது.

தற்போது 15வது நார்வே திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இதில் கடந்த ஆண்டு 2023-ம் ஆண்டில் வெளியான தமிழ் திரைப்படங்களுக்கு விருது வழங்கப்படும். இதுகுறித்து நார்வே தமிழ் திரைப்பட விழா இயக்குநர் வசீகரன் சிவலிங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

“தமிழ்நாடு தமிழ்த் திரைப்படங்களுக்கு – தமிழர் விருதுகளை இந்த தைப்பொங்கல் நாளில் அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். நார்வே தமிழ்த் திரைப்பட விழா இந்த ஆண்டு முதல் “கலைச்சிகரம்” விருதினை “புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் விருது” என்ற பெயரில் வழங்க இருக்கின்றோம். இட்டு நிரப்ப முடியாத, பெரும் அன்பும், பரந்த மனிதநேயமும் கொண்ட எங்கள் திரைக்கலைஞரை இந்த விருது மூலம் நினைவுபடுத்தி இதயபூர்வமாக மதிப்பளிப்பதில் பெருமையடைகின்றோம்.ஏன்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து