முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நண்பனுக்காக படப்பிடிப்பை ரத்து செய்த மிஸ்கின்

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2024      சினிமா
Miskin 2023-02-26

Source: provided

இதய அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் தீரஜ், ‘போதை ஏறி புத்தி மாறி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

தற்போது ‘டபுள் டக்கர்’ படத்தில் நடித்து வருகிறார்.

ஏர் ஃபிளிக் தயாரிப்பில், மீரா மஹதி இயக்கத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக அனிமேஷன் பாத்திரங்களுடன், நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் ஃபேண்டசி திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்திற்காகவே இரண்டு புதுமையான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டு, அவையும் படத்தின் கதாபாத்திரங்களாக படம் முழுவதும் வலம் வரும் இப்படத்தில் தீரஜுக்கு ஜோடியாக ஸ்முரிதி வெங்கட் நடிக்க, கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது 

நிகழ்ச்சியில் இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “நான் செல்போனை அணைத்து வைத்துவிட்டு தொடர்ச்சியாக படப்பிடிப்பில் இருந்தேன். எதேச்சையாக போனை ஆன் செய்த போது தீரஜ் இடம் இருந்து போன் வந்தது. தொடர்ச்சியாக ஷூட்டிங்கும் இருந்தது. இன்று 2 மணியிலிருந்து 10 மணி வரை கால்ஷீட். என்ன செய்வது என்று தெரியாமல் ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு வந்துவிட்டேன். ஏனென்றால் தீரஜ்ஜை எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்று கேட்டால், அவன் இதுவரை குறைந்தது ஒரு 500 உயிரையாவது காப்பாற்றி இருப்பான். அவன் ஒரு இதய சிகிச்சை நிபுணர். குறைவாக சொல்கிறேன் என்று நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றிய மருத்துவர் அவன். உதய்க்கு நெருங்கிய நண்பன், நம் முதல்வரை சூழ்ந்திருக்கும் முக்கிய மருத்துவர்களில் தீரஜ்ஜும் ஒருவன். சற்றும் தலைக்கணம் இல்லாதவன், மிகுந்த அன்பு கொண்டவன், எளிமையாகப் பழகக்கூடியவன். அவன் கூப்பிட்டதும், அவன் இந்த உலகத்திற்குச் செய்த சேவைக்காக என் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நான் வந்துவிட்டேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து