முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அபுதாபி இந்து கோவிலில் நாளை முதல் பொது தரிசனத்துக்கு அனுமதி

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2024      உலகம்
Abu-Dhabi 2023-02-28

Source: provided

அபுதாபி : அபுதாபி இந்து கோவிலில் நாளை மார்ச் 1-ம் தேதி முதல் பொது தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

 அபுதாபியில் துபாய் - அபுதாபி ஷேக் சயீத் நெடுஞ்சாலையில் அல் ரஹ்பாவிற்கு அருகில் அபு முரீகா பகுதியில் 27 ஏக்கர் பரப்பளவில் ரூ. 700 கோடி செலவில் கட்டப்பட்ட இந்து கோவிலை பிரதமர் மோடி கடந்த 14-ம் தேதி திறந்து வைத்தார். 

இதுவே அபுதாபியில் கட்டப்பட்ட முதல் இந்து கற்கோவிலாகும். பாப்ஸ் எனப்படும் சுவாமி நாராயண் அமைப்பு மூலம் கட்டப்பட்ட இக்கோவிலில் கடந்த 15-ம் தேதி முதல் இன்று வரை முன்பதிவு செய்த வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் வி.ஐ.பி.க்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், நாளை மார்ச் 1-ம் தேதி பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் அதிகாரிகள் கூறி உள்னர். காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும். வாரந்தோறும் திங்கட்கிழமை கோவில் மூடப்பட்டிருக்கும் என கோவில் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து