முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுரங்க முறைகேடு வழக்கு: அகிலேஷ் யாதவ் இன்று ஆஜராக சி.பி.ஐ. சம்மன்

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2024      இந்தியா
Akhilesh yadav

Source: provided

லக்னோ : சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் இன்று ஆஜராகுமாறு சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான  அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.

அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்த காலத்தில்  தடைக்கு பிறகும் சுரங்க ஒப்பந்தம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சுரங்க ஊழல் 2016 முதல் விசாரணையில் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில் முதன்முறையாக உ.பி.  முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு இன்று ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறையை மோடி அரசு தவறாக பயன்படுத்துவதாக அகிலேஷ் யாதவ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில் இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து