முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேவகனாக இருந்து, நான் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்: தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திரமோடி பேச்சு

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2024      தமிழகம்
mODI 2023-05-25

தூத்துக்குடி, தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் மறைக்கப்படுகின்றன என்று கூறிய, பிரதமர் நரேந்திரமோடி, நான் சேவகனாக இருந்து, மக்களின்

கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்று தூத்துக்குடியில் அவர் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.  வ.உ.சி. துறைமுக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் சர்பனந்தா சொனோவால்,  இணையமைச்சர் எல்.முருகன்,  தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி,   தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு,  இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து தமிழில் ‘வணக்கம்’ என கூறி பிரதமர் நரேந்திர மோடி தனது உரையை தொடங்கினார்.  அவர் பேசியவதாவது., “தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு உந்துதலாக அமையும்.  இந்த திட்டங்கள் அனைத்தும் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும்.  திட்டங்களின் தொடக்கம் என்பது முன்னேற்றம், வளர்ச்சி, நம்பிக்கைக்கான எடுத்துக்காட்டு.மக்களின் சேவகனாக இருந்து, நான் உங்களின் தேவைகளை விருப்பங்களை நிறைவேற்றுவேன்.  மத்திய அரசின் திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் சாலை வழி இணைப்புகள் மிகவும் சிறப்பாக மாறியுள்ளது.  தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலை இணைப்புகள் அதிகரித்திருக்கிறது.

ஹைட்ரஜன் மூலம் இயங்கும் நாட்டின் முதல் மக்கள் பயண கப்பல் துவங்கப்பட்டுள்ளது. இது விரைவில் பயன்பாட்டிற்கு வரும். காசி கங்கை நதியில் இந்த கப்பல் விரைவில் பயணப்படும். வ.உ.சி துறைமுகத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், தூத்துக்குடி தமிழ்நாடு பசுமை ஆற்றல்,  நீடித்த வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு முன்னேறிய நிலையில் பயணிக்கும்.

காங்கிரஸ் ஆட்சி மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறேன்; அவை கசப்பான உண்மைகள். காங்கிரஸ் ஆட்சியின்போது கோரிக்கையாக இருந்தவை அனைத்தும் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மக்களின் சேவகனாக நான் உங்களின் விருப்பங்கள், கோரிக்கைகளை நிறைவேற்றுகிறேன்.

தமிழ்நாட்டில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் மறைக்கப்படுகின்றன. மத்திய அரசின் திட்டங்கள் குறித்து செய்தித்தாள்களில் வெளியிட தமிழ்நாடு அரசு விடுவதில்லை. தடைகளை எல்லாம் தாண்டி தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியே தீருவோம். தமிழகம் வரும்போதெல்லாம் தமிழர்கள் என் மீது பாசத்தை பொழிகிறார்கள். தமிழர்கள் என் மீது காட்டிய அன்பை பலமடங்காக திருப்பித் தருவேன். தமிழகம் வளர்ச்சியில் தமிழர் நலனில் என்றும் அக்கறையோடு இருப்பேன் என வாக்குறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து