முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நிறைவு

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2024      தமிழகம்
TNPSC 2022 12 20

Source: provided

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்) நடத்தும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்றோடு காலக்கெடு (பிப்.28) நிறைவடைந்தது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 11 வகையான பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரி 30-ம் தேதி வெளியிடப்பட்டது. 6,244 காலி இடங்களுக்கு நடத்தப்படும் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்றே (பிப்.28) கடைசி நாளாகும்.

விண்ணப்பங்களில் மாற்றங்கள் ஏதேனும் செய்ய வேண்டியிருந்தால் மார்ச் 4 முதல் மார்ச் 6 தேதிக்குள் திருத்தங்களைச் செய்ய வேண்டும். குரூப் 4 எழுத்துத் தேர்வு ஜூன் 9-ம் தேதி நடைபெறுகிறது. டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு முடித்தவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 18 முதல் 37 வயதுடையவர்கள் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும், சில பதவிகளுக்கு வயது வரம்பு மாறுபடும். விண்ணப்பிக்க தகுதியானவர்கள் www.tnpscexams.in இந்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து