முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குலசையில் இருந்து ராக்கெட்டை விண்ணிற்கு செலுத்துவது சுலபம் : இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2024      தமிழகம்
Somnath-2023-12-28

Source: provided

தூத்துக்குடி : குலசையில் இருந்து ராக்கெட்டை விண்ணிற்கு செலுத்துவது மிகச் சுலபம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக நேற்று குலசேகரப்பட்டினத்திலிருந்து ரோகிணி எனும் சிறிய வகை ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், திருச்செந்தூரிலிருந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் தளம் அமைப்பதற்கான நிலத்தை தமிழ்நாடு அரசு இஸ்ரோவிடம் ஒப்படைத்துவிட்டது. 2 ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும். இந்தியாவின் 2-வது ராக்கெட் ஏவுதளமாக குலசேகரப்பட்டினம் உள்ளது. குலசேகரப்பட்டினத்திலிருந்து ராக்கெட்டை விண்ணிற்கு செலுத்துவது மிகச் சுலபம். ரூ.1,000 கோடி மதிப்பிலான பணிகள் விரைவில் முடியும் என நம்புகிறேன்.

குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தின் மூலம் நேரம், பொருளாதாரம் போன்றவை சேமிப்பாகிறது. ஆண்டுக்கு 24 சிறிய ராக்கெட்டுகளை ஏவும் வகையில் தளம் அமைக்கப்படும். ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரப்பட்டினத்திலிருந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு 10-ல் ஒரு பங்கு செலவே ஆகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து