முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி விழாவில் கலந்து கொண்டது ஏன்? தி.மு.க. எம்.பி., கனிமொழி விளக்கம்

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2024      தமிழகம்
PM-Modi-1-2024-02-28

சென்னை, தூத்துக்குடி விழாவில் கலந்து கொண்டது ஏன்? என்பது குறித்து தி.மு.க. எம்பி கனிமொழி விளக்கமளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது.,“பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு முக்கால் தொகை பணத்தை கொடுத்துள்ளது.  ஆனால் அதற்கு பிரதமர் மந்திரி வீடு வழங்கும் திட்டம் என்று கூறுகின்றனர்.  திமுக காணாமல் போகும் என்று கூறியவர்கள் தான் காணாமல் போய் உள்ளனர்.  ஆனால் திமுக அப்படியே தான் இருக்கிறது.  குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி.

அரசு விழாவில் எனது பெயரை சொல்வதற்கு கூட பிரதமருக்கு மனமில்லை.  இங்கு ஏவுதளம் அமைப்பது முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் கனவு. இதில் எங்களுக்கும் உரிமை உண்டு. அதற்காக நாங்கள் கலந்து கொண்டோம்.  இவ்வாறு திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து