முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுத்தேர்வு முடியும் வரை மின் நிறுத்தம் செய்யக்கூடாது : அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2024      தமிழகம்
Thangam 2023 04 05

Source: provided

சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், பராமரிப்புக்காக மின் நிறுத்தம் செய்ய வேண்டாம் என்றும் தேர்வு காலம் முடியும் வரை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். 

அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் அதிகாரிகள் உடனான ஆய்வுக்கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, 

கோடைகாலத்தின் போது சீரான மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.  10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியுள்ள நிலையில், பராமரிப்புக்காக மின் நிறுத்தம் செய்ய வேண்டாம். தேர்வு காலம் முடியும் வரை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டாம். 

கோடைகால மின் தேவை எந்தவித பற்றாக்குறையும் இல்லாமல் பூர்த்தி செய்யப்படும்.  தொடர்ச்சியாக மின்தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி பணியாற்ற வேண்டும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து