முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களவை தேர்தல்: தொகுதி பங்கீடு குறித்து தி.மு.க.-வி.சி.க. இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2024      தமிழகம்
Anna-Arivalayam-1

Source: provided

சென்னை :  மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.-வி.சி.க. இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டில் தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது. தற்போது தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி.க., முஸ்லீம் லீக், கொ.ம.தே.க. ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. புதிதாக மக்கள் நீதி மய்யம் இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பாராளுமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, தி.மு.க. - வி.சி.க. இடையே இன்று மீண்டும் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. 

அப்போது முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019 பாராளுமன்றத் தேர்தல் முதலே தி.மு.க கூட்டணியில் வி.சி.க அங்கம் வகித்து வருகிறது. 

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 2 எம்.பி தொகுதிகளை பெற்று திருமாவளவனும், வி.சி.க பொதுச் செயலாளர் ரவிக்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து