முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசின் எல்காட் நிறுவன மேலாண் இயக்குனர் ராஜினாமா

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2024      தமிழகம்
Anish-Shekhar 2024-03-01

Source: provided

சென்னை : தமிழக அரசின் எல்காட் நிறுவன மேலாண் இயக்குனர் அனீஷ் சேகர், தனது ஐ.ஏ.எஸ். பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதத்தை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஏற்றுக்கொண்டார். 

தனது சொந்த காரணங்களுக்காக ஐ.ஏ.எஸ். பொறுப்பில் இருந்து விலகுவதாக அனீஷ் சேகர் விளக்கம் அளித்துள்ளார். மதுரை மாவட்ட கலெக்டராக 2021 முதல் 2023 வரை அனீஷ் சேகர் திறம்பட பணியாற்றினார். 

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரான அனீஷ் சேகர், கடந்த 2011-ம் ஆண்டு தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து