முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வார விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 695 சிறப்பு பஸ்கள் இயக்கம் : அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2024      தமிழகம்
Bus 2023-05-24

Source: provided

சென்னை : வார விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 695 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- முகூர்த்த தினமான நேற்று மற்றும் வார விடுமுறை நாளான இன்று சனிக்கிழமை (2-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை (3-ம் தேதி) ஆகிய தினங்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ஊர்களுக்கு இன்று (சனிக்கிழமை) 425 பஸ்களும் இயக்கப்படும்.

மேலும், சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 70 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, தினசரி இயக்கக் கூடிய பஸ்களுடன் கூடுதலாக இன்று (சனிக்கிழமை) 495 பஸ்களும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 695 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து