முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்: ஜெய்ஸ்வால் படைக்கவுள்ள மாபெரும் வரலாற்று சாதனை

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2024      விளையாட்டு
Jaiswal 2024-02-17

Source: provided

தர்மசாலா : ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடிக்க இங்கிலாந்திற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் மாபெரும் சாதனை படைக்க இந்திய வீரர் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு உள்ளது.

கடைசி போட்டி...

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது.

வெற்றிக்கு பங்கு...

முன்னதாக இந்த தொடரில் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால் 4 போட்டிகளில் 655 ரன்கள் விளாசி இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக 2-வது போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் 209 ரன்கள் விளாசிய அவர் 3-வது போட்டியில் 12 சிக்சர்களுடன் 214 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

முதல் இந்திய வீரர்...

அதன் வாயிலாக இங்கிலாந்துக்கு எதிராக 2 இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். மேலும் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு தொடரில் அதிக ரன்கள் (655 ரன்கள்) அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற விராட் கோலியின் சாதனையையும் சமன் செய்தார். இந்நிலையில் அடுத்ததாக நடைபெற உள்ள 5-வது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் படைக்க வாய்ப்புள்ள மாபெரும் சாதனை விவரம் பின்வருமாறு;-

அதிக ரன்கள்...

இந்த போட்டியில் 77 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சுனில் கவாஸ்கரின் வாழ்நாள் சாதனையை உடைத்து ஜெய்ஸ்வால் மாபெரும் வரலாற்று சாதனை படைப்பார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் சுனில் கவாஸ்கர் 732 ரன்கள் அடித்துள்ளதே முந்தைய சாதனையாகும்.

ஒரு தொடரில் அதிக ரன் எடுத்தவர்கள்:

1. சுனில் கவாஸ்கர் - 732 ரன்கள். (இந்தியா)

2.கோலி/ ஜெய்ஸ்வால்- 655 ரன்கள். (இந்தியா).

3. விராட் கோலி - 610 ரன்கள். (இந்தியா)

4. விஜய் மஜ்ரேக்கர் - 586 ரன்கள். (இந்தியா).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து