முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2024      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபுவின் வீ்டு மற்றும் தொழில் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபுவின் வீ்டு மற்றும் தொழில் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிகாலை முதல் சோதனை நடத்தினர்.  இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"கள்ளக்குறிச்சி தொகுதி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் தி.மு.க. அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து