முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சா எண்ணெய் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரி அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 1 மார்ச் 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : கச்சா எண்ணெய் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியை உயர்த்தியது மத்திய அரசு.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் கச்சா எண்ணெய் மீதான திடீர் லாப வரியை (விண்ட்ஃபால் வரி) மத்திய அரசு உயர்த்தி உள்ளது. கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீதான இந்த வரியை டன்னுக்கு ரூ.3,300-ல் இருந்து ரூ.4,600 ஆக உயர்த்தி உள்ளது. சிறப்பு கூடுதல் கலால் வரி (SAED) என்ற பெயரில் இந்த வரி விதிக்கப்படுகிறது.

அதேசமயம், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியானது, ஒரு லிட்டருக்கு 1.50 ரூபாயில் இருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் விமான எரிபொருள் அல்லது ஏ.டி.எப். மீதான வரியும் பூஜ்ஜியமாக நீடிக்கிறது. இந்த புதிய வரி விதிப்பு நேற்று முதல் (மார்ச் 1) நடைமுறைக்கு வந்துள்ளது.

திடீர் லாப வரி (விண்ட்பால் வரி) என்பது, வழக்கத்திற்கு மாறாக சாதகமான சந்தை நிலைமைகள் காரணமாக, அதிக லாபம் ஈட்டியதாக கருதப்படும் வணிகங்களின் மீது விதிக்கப்படும் வரி ஆகும். உள்நாட்டு சந்தையில் எரிசக்தி பொருட்களின் பற்றாக்குறையை சமாளிக்க, மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி எரிசக்தி நிறுவனங்களின் திடீர் லாபத்திற்கு வரி விதிக்கும் நடைமுறையை அறிமுகம் செய்தது. அதாவது, பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதியில் சிறப்பு கூடுதல் கலால் வரியை சேர்த்தது.

15 நாட்களுக்கு ஒருமுறை இந்த வரி விகிதங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு மாற்றியமைக்கப்படுகின்றன. முந்தைய இரண்டு வாரங்களில் சராசரி எண்ணெய் விலைகளின் அடிப்படையில் இந்த மதிப்பாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து