முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரசுக்கு எத்தனை தொகுதி?: முதல்வர் ஸ்டாலினை சந்திக்க சென்னை வருகிறார் கார்கே

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2024      தமிழகம்
Karke-1 2024-02-02

Source: provided

சென்னை : அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அடுத்த வாரம் சென்னை வருகிறார்.சென்னை வரும் கார்கே முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ்-தி.மு.க. தொகுதி உடன்பாடு காண்பதில் இழுபறி நிலவுகிறது. கடந்த தேர்தலை விட குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்க தி.மு.க. முடிவு செய்து இருப்பதால் உடன்பாடு ஏற்படவில்லை. 

டெல்லி காங்கிரஸ் தலைவர்களும் தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குழு தலைவருமான டி.ஆர்.பாலுவும் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.தொகுதி பிரச்சனையால் இந்தியா கூட்டணிக்கு சிக்கல் வந்து விடக்கூடாது என்பதிலும் அதே நேரம் தொகுதி எண்ணிக்கையில் பிடிவாதமாகவும் காங்கிரஸ் உள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கார்கே கலந்து கொள்ள ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கான இடம் தேர்வு நடக்கிறது. வருகிற 10-ம்  தேதியில் இருந்து 15-ம்  தேதிக்குள் இந்த கூட்டத்தை நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. 

இந்த கூட்டத்தில் பங்கேற்க சென்னை வரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார். அதற்குள் தொகுதி உடன்பாடு எட்டப்படும் என்று காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையில் இருக்கிறார்கள். வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து காங்கிரசார் அழைக்கப்படுகிறார்கள். கூட்டத்துக்கு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்குகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து