முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2024      தமிழகம்
Ma-Subramanian 2023-10-13

Source: provided

சென்னை :  சென்னை சைதாப்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 

தமிழகம் முழுவதும் நேற்று 43,051 மையங்களில் 57 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் நேற்று சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டனர். 

5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதே போல, குழந்தைகளின் வசதிக்காக நேற்று முக்கிய பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சோதனைச்சாவடிகள், விமான நிலையங்களில் பயண வழி மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

மேலும் நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க வழிவகை செய்யப்பட்டு இருந்தது.  சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து