முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பானி இல்ல திருமண விழா: நடிகர் ரஜினி குடும்பத்தோடு பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 3 மார்ச் 2024      சினிமா
Rajini 2024-03-03

Source: provided

காந்திநகர் : அம்பானி இல்ல திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்றனர்.

பிரபல தொழிலதிபரும், இந்தியாவின் டாப் பணக்காரர்களின் ஒருவருமான முகேஷ் அம்பானியின் மகன். ஆனந்த் அம்பானிக்கும் - ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்த நிலையில், இவர்களின் திருமணம் ஜூலை மாதம் நடக்க இருக்கிறது.

இந்நிலையில் இவர்களின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் மார்ச் 1-தேதி தேதி முதல், 3-ம் தேதி (நேற்று) வரை தொடர்ந்து (3 நாட்கள்) நடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்கள் களைகட்ட துவங்கிய நிலையில், இதில் ஏராளமான திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், சர்வதேச பிரபலங்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக நடிகர் ஷாருக்கானின் குடும்பம், ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ஜோடி, நடிகர் சைப் அலிகான் மற்றும் அவருடைய மனைவி கரீனா கபூர், விளையாட்டு வீரர் தோனி மற்றும் அவரின் மனைவி சாக்ஷி, நடிகை ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர், நடிகர் அக்ஷய் குமார், அமீர் கான், சல்மான் கான், போன்ற ஏராளமான நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அதே போல் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மகள் டிவாகா ட்ரம்ப், டாடா குழும தலைவர் சந்திரசேகரன், கோடக் மஹிந்திரா வங்கியின் தலைவர் உதய் கோடக், டிஸ்னி தலைமை நிர்வாக அதிகாரி பாப் இகர், சுந்தர் பிச்சை, மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் மற்றும் அவரின் மனைவி பிரிஸில்லா உள்ளிட்ட பல் தொழிலதிபர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், தன்னுடைய மனைவி மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் குஜராத்தின், ஜாம்நகர் பகுதிக்கு வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அம்பானியின் வீட்டு ப்ரீ வெட்டிங் விசேஷத்தில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மிகவும் எளிமையாக டீஷர்ட் மற்றும் லோயருடன் வந்து பலரையும் வியக்க வைத்துள்ளார். ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த்தும் எந்த ஒரு ஆடம்பரமும் இன்றி, மிகவும் எளிமையான காட்டன் சல்வார் உடுத்தியுள்ளார். ஐஸ்வர்யா மட்டும் கொஞ்சம் மாடனாக ஆக ஜீன்ஸ், டீ -ஷர்ட் மற்றும் கூலஸ் அணிந்து காணப்படுகிறார்.

இந்த ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் மட்டும், அம்பானி சுமார் 2000திற்கும் மேற்பட்ட மிகவும் பிரபலமான மனிதர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதை போல் இதில் கலந்து கொள்ளும் பிரபலங்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் சுமார் 2,500 வகையான உணவு வகைகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும் ஒரு தடவை செய்த உணவை மீண்டும் ரிப்பீட் செய்யக்கூடாது என்ற கட்டளையையும் அம்பானி விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து