எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : வரும் 12-ம் தேதிக்கு பிறகு விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளதாக அமலாக்கத்துறைக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இந்த நிலையில் மதுபான கொள்கையில் உள்ள சில தகவல்கள் முன்கூட்டியே கசிய விடப்பட்டு அதன் மூலம் ஆதாயம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இந்த கொள்கையை ஆம் ஆத்மி அரசு திரும்பப் பெற்றது. மதுபான கொள்கையில் ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளது. சட்டவிரோதப் பரிவர்த்தனை நடைபெற்றது என சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் எம்.பி உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத்துறை ஏற்கனவே 7 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் 7 முறையும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
தேர்தலுக்கு முன்பாக அமலாக்கத் துறை மூலமாக தன்னை கைது செய்து பிரச்சாரம் செய்வதை தடுக்க பா.ஜ.க முயல்வதாக கெஜ்ரிவால் குற்றம் சாட்டி வருகிறார். தன்னை கைது செய்த பின்னர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு டெல்லியில் புதிய ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் தற்போது கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8-வது முறையாக சம்மன் அனுப்பி இருக்கிறது . அமலாக்கத்துறை அனுப்பிய இந்த சம்மனை ஏற்று கெஜ்ரிவால் ஆஜராவாரா? அல்லது முந்தைய சம்மன்களை புறக்கணித்தது போல தற்போதும் ஆஜராகாமல் புறக்கணிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு டெல்லி அரசியலில் ஏற்பட்டு இருந்தது.
இந்த நிலையில், அமலாக்கத்துறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அனுப்பியுள்ளார். அதில், சம்மன் அனுப்பியது சட்டவிரோதமானது என்றும், ஆனால் அதற்கு பதிலளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் வரும் 12-ம் தேதிக்கு பிறகு விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளதாக அமலாக்கத்துறைக்கு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார். தேதியை தெரிவித்தால் காணொளியில் விசாரணைக்கு ஆஜராவதாக கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
சாம்சனுக்கு பயிற்சியாளர் ஆதரவு
13 Sep 2025சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் சொதப்புவார் என்று அர்த்தமில்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் : எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
13 Sep 2025சிங்காநல்லூர் : கோவையில் மெட்ரோ ரயில் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது, ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏதேதோ பிரச்னை சொல்லி முடக்கிவைத்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025