முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-ம் பாலினத்தவர் எண்ணிக்கை சேகரிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் : தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 4 மார்ச் 2024      தமிழகம்
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் கிரேஸ் பானு கணேசன்.  மூன்றாம் பாலினத்தவரான இவர்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,  “கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு,  தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா,  நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு ஜனவரி 09 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.  அப்போது, தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.  இதுகுறித்து அரசு கருத்து தெரிவிக்க வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  இதையடுத்து, இந்த வழக்கு குறித்த விசாரணையை மார்ச் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இந்த நிலையில்,  இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக,  மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  மேலும், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எத்தனை சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது குறித்து கொள்கை முடிவை எடுக்க அரசுக்கு அறிவுறுத்தி,  வழக்கின் விசாரணையை ஏப்ரல் 17 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து