முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருது: பரிந்துரை பட்டியலில் ஜெய்ஸ்வால்

திங்கட்கிழமை, 4 மார்ச் 2024      விளையாட்டு
Jaiswal 2024-02-17

Source: provided

துபாய் : ஐ.சி.சி.யின் சிறந்த வீரர் விருது பரிந்துரை பட்டியலில் முதல்முறையாக ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார்.

தலா 3 வீரர்கள்...

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது. அதில் சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய இளம் வீரர், நியூசிலாந்தின் முன்னணி வீரர் மற்றும் இலங்கை அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்து அசத்திய வீரர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சிறந்த வீராங்கனை... 

அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகள் படைத்து வரும் இந்திய இளம் வீரரான ஜெய்ஸ்வால், நியூசிலாந்து அணியின் முன்னணி வீரரான வில்லியம்சன் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து அசத்திய பதும் நிசாங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பெயர் பட்டியலில் ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட் மற்றும் யு.ஏ.இ. வீராங்கனைகளான கவிஷா எகொடகே, ஈஷா ஓசா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  இவர்கள் மூவரில் பிப்ரவரி மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதினை வெல்லப் போவது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து