முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் 49 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2024      வர்த்தகம்
Gold 2022-12-31

சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மீண்டும் உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.49 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.

வாரத்தின் முதல் நாளான நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் நேற்று மீண்டும் சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.49,080-க்கும், ஒரு கிராம் ரூ.45 உயர்ந்து ரூ.6,135-க்கும் விற்பனையானது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.80.30-க்கும், ஒரு கிலோ ரூ.80,30-க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களைக் கண்டு வரும் நிலையில், கடந்த 9-ஆம் தேதி புதிய உச்சமாக ரூ.49,200-ஐ தொட்டு மக்களுக்கு அதிர்ச்சி அளித்தது. ஒரு கிராம் ரூ.6,150-க்கு விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் இனி வெகுவாக குறைவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து