முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பங்குனி உத்திர திருவிழா: பழனி முருகன் கோவிலில் நாளை திருத்தேரோட்டம்

சனிக்கிழமை, 23 மார்ச் 2024      ஆன்மிகம்
Palani 2023-08-21

Source: provided

பழனி : பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை நடக்கிறது. 

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உபகோயிலான திருஆவினன்குடி கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 18-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் கிரி வீதிகளில் தங்க மயில், வெள்ளி மயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  விழாவின் 6-ம் நாளான நேற்று மாலை 6 மணியளவில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.  இரவு 8.30 மணிக்கு மேல் சுவாமி மணக்கோலத்தில் வெள்ளித் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

விழாவின் முக்கிய நிகழ்வானபங்குனி உத்திரத் தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. கிரி வீதிகளில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.  திருவிழாவையொட்டி  பக்தர்களின் வசதிக்காக வரும் 26-ம் தேதி வரை திருச்சி, மதுரை,தேனி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பழனிக்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து