முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்தில் சி.ஏ.ஆர்.டி. சிகிச்சை மூலம் புற்றுநோயை வென்ற முதல் இந்திய வம்சாவளி சிறுவன்

ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2024      உலகம்
London 2024-03-31

Source: provided

லண்டன் : இங்கிலாந்தில் சி.ஏ.ஆர்.டி. சிகிச்சை மூலம் இந்திய வம்சாளி சிறுவன் யுவன் தாக்கர் முழுமையாக குணமடைந்துள்ளார். இந்த சிகிச்சை மூலம் இங்கிலாந்தில் புற்றுநோயிலிருந்து குணமாகி உள்ள முதல் குழந்தை இவர் ஆவார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே வாட்போர்ட் பகுதியை சேர்ந்தவர் யுவன் தாக்கர் (16). இவருக்கு 6 வயதாக இருந்த போது லியூக்மீயா எனப்பதும் ரத்த புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக கீமோதெரபி மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டும் முழுமையாக குணமடையவில்லை.

இறுதியாக, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு உயிரணுக்களை மரபணு மாற்றம் செய்து அவற்றை கொண்டு புற்றுநோய் செல்களை அழிக்கும் சி.ஏ.ஆர்.டி. கைம்ரியா தெரபி சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். இந்த சிகிச்சையில், சோதனைக் கூடத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட டி செல்களை நோயாளியின் ரத்த நாளம் வழியாக செலுத்தி புற்றுநோய் செல்கள் அழிக்கப்படும். 

கடந்த 2019-ல் 11 வயதாக யுவன் இருக்கும் போது இந்த நவீன சிகிச்சை முறை தொடங்கப்பட்டது. இந்நிலையில், சுமார் 5 ஆண்டுக்கு பிறகு யுவன் தாக்கர் புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். இங்கிலாந்து சி.ஏ.ஆர்.டி. கைம்ரியா தெரபி மூலம் குணமான முதல் குழந்தை யுவன் தாக்கர் ஆவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து