முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற போபண்ணா - எப்டன் ஜோடி

ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2024      விளையாட்டு
Bopanna-Epton 2024-03-31

Source: provided

மியாமி : அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடப்பு மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இறுதிப் போட்டியில் குரோஷியாவின் இவான் டுடிக், அமெரிக்காவின் ஆஸ்டின் கிரஜி செக் ஜோடியுடன் பலப்பரீட்சை மேற்கொண்டனர். இதில் 6-7(3), 6-3, 10-6 என்ற செட் கணக்கில் ரோகன் போபண்ணா - மேத்யூ எப்டன் ஜோடி வெற்றி பெற்றது. நடப்பு ஆண்டில் அவர்கள் இருவரும் இணைந்து வென்றுள்ள இரண்டாவது சாம்பியன் பட்டம் இது.

முன்னதாக, அரை இறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடியானது ஸ்பெயினின் மார்செல் கிரானோல்லர்ஸ், அர்ஜெண்டினாவின் ஹொராசியோ ஜெபலோஸ் ஜோடியை வீழ்த்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து