முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரிசு கொடுத்ததுக்கு நன்றி விராட் பையா - ரிங்கு சிங் நெகிழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 31 மார்ச் 2024      விளையாட்டு
Virat-Kohli 2023 07-22

Source: provided

பெங்களூரு : ஐ.பி.எல் முன் தினம் நடைபெற்ற 10-வது லீக் ஆட்டத்தில் ஆர்.பி.சி - கே.கே. ஆர் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. பெங்களூர் தரப்பில் விராட் கோலி 59 பந்தில் 83 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 183 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நரைன், பில் சால்ட், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் அதிரடியின் மூலம் 16.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டை மட்டும் இழந்து 186 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் விராட் கோலி மெதுவாக விளையாடியதே பெங்களூரு தோல்வியை சந்திப்பதற்கு காரணமாக அமைந்ததாக ஒரு தரப்பு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்தவுடன் கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங்கிற்கு பெங்களூரு நட்சத்திர வீரர் விராட் கோலி பேட் பரிசளித்துள்ளார். 

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.இதையடுத்து பேட்டையும் சேர்த்து விராட் கோலி தமக்கு விலைமதிப்பில்லாத சில ஆலோசனைகளையும் கொடுத்ததாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்ட பதிவில், பேட்டுக்காகவும் ஆலோசனைக்காகவும் மிகவும் நன்றி பையா. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த ஸ்டோரி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து