முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் அமெரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி

திங்கட்கிழமை, 1 ஏப்ரல் 2024      உலகம்
South-America 2024-04-01

Source: provided

கியூடோ : கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஈக்வடார். இந்நாட்டின் கயாக்யூலி மாகாணம் குவாஸ்மா நகரில் பொதுவெளியில் சிலர் கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த நபர் கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஆதிக்கம் அதிகமுள்ள ஈக்குவடாரில் அவ்வப்போது கடத்தல் கும்பல்கள் இடையே மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதேவேளை பொதுமக்கள் மீதும் கடத்தல் கும்பல்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து