எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Delhi-Capitals 2024-03-23](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/04/01/Delhi-Capitals_2024-03-23.jpg?itok=6r4GnTEG)
Source: provided
விசாகப்பட்டினம் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்று நடப்பு சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
13-வது போட்டி...
ஐபிஎல் தொடரின் 13வது போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் தொடங்கியது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி இதில் களமிறங்கியது. சென்னை அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வென்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அதேநேரம், டெல்லி அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் இருந்தது.
29 முறை மோதல்...
இதனால் ஹாட்ரிக் வெற்றி பெற சென்னை அணியும், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க டெல்லி அணியும் முனைப்பு காட்டின. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 19 முறையும், டெல்லி அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
டெல்லி பேட்டிங்...
இந்நிலையில் போட்டிக்கான டாஸை வென்று டெல்லி கேப்பிடல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் பிரித்வி ஷா களமிறங்கினர். 10வது ஓவரை முஷ்தாபிஷூர் வீசிய முதல் பந்தில் வார்னர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை முஷ்தாபிஷூர் தவறவிட்டார். இருப்பினும் 3வது பந்தில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை பதிரனா கெட்டியாக பிடித்துக் கொண்டார். வார்னர் 35 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து ரிஷப் பண்ட் களமிறங்கினார். டெல்லி கேபிடல்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது.
மார்ஷ் போல்...
11-வது ஓவரை ஜடேஜா வீசினார். 4வது பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் பிரித்வி. அவர் 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனையடுத்து மிட்செல் மார்ஷ் களமிறங்கினார். 15வது ஓவரை பதிரனா வீச 4வது பந்தில் மார்ஷ் போல்டானார். மார்ஷ் 12 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ஸ்டப்ஸ் 2வது பந்தில் போல்டாகி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். டெல்லி கேபிடல்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது.
192 ரன்கள் இலக்கு...
19வது ஓவரை பதிரனா வீச 5வது பந்தில் ருதுராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பண்ட் 32 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். 20வது ஓவரை முஷ்தாபிஷூர் வீசினார். இந்த ஓவரில் மொத்தம் 12 ரன்களுடன் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து சென்னை அணிக்கு 192 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
மிட்செல் - ரஹானே...
இதனைத் தொடர்ந்து 192ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மிட்செல் மற்றும் ரஹானே ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை நிதானமாக உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து மிட்செல் , ரஹானே ஆட்டமிழந்து வெளியேற அடுத்து வந்த ரிஜ்வியும் டக் அவுட் ஆனார்.
டோனி அதிரடி...
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபேயும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற ஜடேஜாவுடன் அணியின் முன்னாள் கேப்டன் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடி பந்துகளை பவுண்ட்ரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் பறக்க விட்டன. குறிப்பாக டோனி இந்த ஐபிஎல் சீசனில் முதல் முறையாக பேட்டிங்கில் களமிறங்கினார். டோனியின் அதிரடி ஆட்டத்தால் மைதானம் முழுக்க “டோனி..டோனி..” என்கிற ஆரவாரத்துடன் விசாகப்பட்டிணம் மைதானம் சேப்பாக்கம் மைதானம் போல காட்சியளித்தது.
பினிஷிங் ஷாட்...
இறுதியாக மகேந்திர சிங்கின் ஃபினிஷிங் ஷாட்டாக பந்தை சிக்ஸிற்கு பறக்க விட்டார். இதன்மூலம் 16 ரன்களுக்கு 37 ரன்கள் குவித்தார். இறுதியாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணியால் இலக்கை அடையமுடியவில்லை. இதனைத் தொடர்ந்து சென்னை அணியின் ஹாட்ரிக் வெற்றியை டெல்லி அணி தடுத்து நிறுத்தியுள்ளது. இப்போட்டியின் ஆட்ட நாயகனாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வீரர் கலீல் அகமது தேர்வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முக்கோண உருளைக்கிழங்கு நக்கெட்ஸ்![]() 2 days 12 hours ago |
கடாய் பன்னீர்![]() 6 days 15 hours ago |
சூப்பர் ஸ்நாக்ஸ்![]() 1 week 2 days ago |
-
டி-20 தொடர் இன்று ஆரம்பம்: இந்தியா-இலங்கை அணிகள் முதல் போட்டியில் மோதல்
26 Jul 2024பல்லகெலே : டி-20 தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தியா-இலங்கை அணிகள் முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
-
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர்திறப்பு வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக உயர்வு: கிடுகிடுவென அதிகரிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்
26 Jul 2024மேட்டூர், கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
குற்றவியல் துறை இயக்குநர் நியமனம்: எடப்பாடி கண்டனம்
26 Jul 2024சென்னை : தமிழக குற்றவியல் துறை இயக்குநராக ஹசன் முகமது ஜின்னா நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விஷ சாராய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
26 Jul 2024சென்னை : விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாயை அரசு வழங்கக்கூடாது எனக்கூறி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளத
-
முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி
26 Jul 2024சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்று வர மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
-
டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் : ஷூப்மன் கில் தகவல்
26 Jul 2024மும்பை : அடுத்து வரும் டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் என்று இந்திய டி-20 அணியின் ஷூப்மன் கில் தெரிவித்துள்ளார்.
-
கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார்: ஒபாமா
26 Jul 2024நியூயார்க் : கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார் என்ற முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
-
கார்கில் வெற்றி தினம்: முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் பெருமிதம்
26 Jul 2024சென்னை : கார்கில் வெற்றி தினத்தில் வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பேரனை பள்ளிக்கு அழைத்து சென்ற நடிகர் ரஜினிகாந்த் : இணையத்தில் புகைப்படங்கள் வைரல்
26 Jul 2024சென்னை : பேரனை பள்ளிக்கு அழைத்துச் சென்ற நடிரக் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
-
டெல்லியில் தமிழ்நாடு இல்ல புதிய கட்டிடங்கள் : முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
26 Jul 2024சென்னை : டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ரூ. 257 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது.
-
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி
26 Jul 2024புதுடெல்லி : பாராளுமன்ற மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் விவாதங்களை கேட்க மறுப்பதாக கூறி நேற்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
-
சவுக்கு சங்கர் ஆட்கொணர்வு வழக்கு: விசாரணையில் இருந்து விலகுவதாக ஐகோர்ட் நீதிபதிகள் அறிவிப்பு
26 Jul 2024சென்னை : யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக ஐகோர்ட் நீதிபதி எம்.எஸ்.
-
இலங்கை அதிபர் தேர்தல் செப். 21- ல் நடைபெறும் : ஆக. 15 முதல் மனு தாக்கல்: ஆணையம் அறிவிப்பு
26 Jul 2024கொழும்பு : இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21-ல் நடைபெறும் என்றும் ஆகஸ்ட் 15 முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அற
-
வங்கக்கடலில் புதிய தாழ்வுப்பகுதி: நீலகிரி, கோவையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
26 Jul 2024சென்னை : வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 628 புலிகள் உயிரிழப்பு: அரசு தகவல்
26 Jul 2024புதுடெல்லி : இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 628 புலிகள் இயற்கை காரணங்களுக்காகவும், வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் கீர்
-
இன்று ஆடிக்கிருத்திகை: திருத்தணியில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை ரூ.100 ஆக குறைப்பு: அமைச்சர் சேகர்பாபு
26 Jul 2024சென்னை : இன்று ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருத்தணியில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை ரூ.
-
காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், வாக்கெடுப்புக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
26 Jul 2024சென்னை : காஞ்சிபுரம் மேயருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மற்றும் வாக்கெடுப்புக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
-
பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: தமிழகம் முழுவதும் இன்று காங்கிரசார் போராட்டம்: செல்வப்பெருந்தகை
26 Jul 2024சென்னை : மத்திய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி, தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து இன்று சனிக்கிழமை தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்த
-
தமிழக அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயம் ஆகாது : போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி
26 Jul 2024திருப்பத்தூர் : வெளியாகும் செய்தி முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ல போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தமிழக அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயம் ஆகாது என்று உறுதிப
-
ஓரவஞ்சனையின் மொத்த வடிவம் மத்திய பா.ஜ.க. அரசு : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
26 Jul 2024சென்னை : ஓரவஞ்சனையின் மொத்த வடிவம்தான் மத்திய பா.ஜ.க. அரசு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
பொருநை அருங்காட்சியக பணி விரைவில் முடிந்து திறக்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்பார்ப்பு
26 Jul 2024சென்னை : கீழடி மற்றும் ஒளிரும் திருமலை நாயக்கர் அரண்மனை போல், நெல்லையில் உள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறக்கும் பணிகளும் விரைவில் முடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக
-
காசா விவகாரத்தில் அமைதியாக நான் இருக்கப்போவதில்லை : கமலா ஹாரிஸ் எச்சரிக்கை
26 Jul 2024வாஷிங்டன் : காசா விவகாரத்தில் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை என்று அமெரிக்க தேர்தல் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடனான சந்திப்புக்குப்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-07-2024.
26 Jul 2024 -
பெண் காவலர்கள் குறித்து அவதூறு: சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்
26 Jul 2024கோவை : பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
-
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றம்
26 Jul 2024தூத்துக்குடி : தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தின் 442-வது ஆண்டு திருவிழா நேற்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.