முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழியர்களுடன் டோனி புகைப்படம்

திங்கட்கிழமை, 1 ஏப்ரல் 2024      விளையாட்டு
Dhoni 2024-04-01

Source: provided

ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் வார்னர் 52 ரன், பண்ட் 51 ரன் எடுத்தனர். இதையடுத்து 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 171 ரன் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் இறுதிகட்டத்தில் வெற்றிக்காக போராடிய டோனி 16 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். டோனிக்கு நடப்பு ஐ.பி.எல் சீசன் கடைசி சீசனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த போட்டி முடிவுற்ற பின்னர் விசாகப்பட்டின மைதான ஊழியர்கள் டோனியுடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

_________________________________________________________

ரசிகர்களுடன் சாக்ஷி கொண்டாட்டம்

ஐபிஎல் தொடரில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி, டெல்லி அணியிடம் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தும் அதனை சென்னை அணி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். களமிறங்கிய பேட்ஸ்மேன்களும் சரிவர விளையாடவில்லை. ஒரு கட்டத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் டோனி களத்துக்குள் நுழைந்தார். இதை மைதானத்தில் இருந்த சென்னை  அணியின் ரசிகர்கள் உற்சாகத்துடன் அவரை வரவேற்றனர். அவரை ரசிகர்கள் கூச்சலிட்டு வரவேற்ற போது மைத்தனத்தில் 128 டெசிபல் (Decibal) அளவிற்கு சத்தம் பதிவானது. இதுவரை ஐபிஎல் போட்டிகளில் பதிவான அதிக டெசிபல் அளவு இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தல டோனியும் அவரால் முடிந்த வரை வாய்ப்பாய் அமைந்த பந்துகள் அனைத்தையும் சிக்ஸர், பவுண்டரிகள் பறக்க விட்டார். ஆனாலும், சிஎஸ்கே அணியால் இலக்கை அடைய முடியாமல் தோல்வியடைந்தது. மேலும், சென்னை அணியின் இந்த தோல்வியை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் ‘தல தரிசனம்’ தான் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் உற்சாகத்துடன் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ரசிகர்கள் தான் இப்படி டோனி யின் ஆட்டத்தை பார்த்து கொண்டாடுகிறார்கள் என்றால், டோனியின் மனைவி சாக்‌ஷியும் கொண்டாடினார். 

_________________________________________________________

பழைய பதிவு இணையத்தில் வைரல்

ஐபிஎல் தொடரின் 13வது போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் நடைபெற்றது.  ருதுராஜ் கெய்க்வாட்  தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்  மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்றது. இந்த போட்டியில்  டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு எக்ஸ் தளத்தில் டோனி வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. “யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது முக்கியமல்ல.  நான் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக இருக்கிறேன்.”  என்று டோனி பதிவிட்டிருந்தார்.

_________________________________________________________

டோனி பேட்டிங் குறித்து பிளெமிங் 

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் தோல்வியடைந்திருந்தாலும், டோனி யின் பேட்டிங் எங்களுக்கு ஒரு நேர்மறை உணர்வை கொடுத்துள்ளது என சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார். டெல்லி அணிக்கு எதிரான தோல்விக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பிளெமிங் கூறியதாவது, டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் தோல்வியடைந்திருந்தாலும், டோனி யின் பேட்டிங் எங்களுக்கு ஒரு நேர்மறை உணர்வை கொடுத்துள்ளது. அதிலும் காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்த பின் முதல் முறையாக பேட்டிங் செய்ய களமிறங்கி அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த தோல்வியை பொறுத்தவரை களத்தில் சி.எஸ்.கே அணியின் செயல்பாடுகளை வெளிப்படையாக காட்டுகிறது. நாங்கள் கொஞ்சம் மோசமாக விளையாடினோம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.  ஐ.பி.எல் போன்ற நீண்ட தொடர்களில் ஏற்ற, இறக்கங்கள் இருப்பது சாதாரணம் தான். ஆனால் ஒவ்வொரு முறையும் ருதுராஜ் கெய்க்வாட் ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். அதனால் கவலை கொள்ளும் அளவிற்கு எந்த தேவையும் இல்லை. அனைத்து முடிவுகளிலும் டோனியின் பங்கும் உள்ளது. அவரும் ஜடேஜாவும் களத்தில் ருதுராஜிற்கு உதவியாக இருக்கிறார்கள். இந்த போட்டிக்கு முன்பாக விளையாடிய 2 போட்டிகளிலும் சி.எஸ்.கே அணி வென்றது. சொந்த மண்ணில் இருந்து வெளியில் வந்து விளையாடும் போது என்ன மாதிரியான சவால் இருக்கும் என்பது தெரியும். இவ்வாறு அவர் கூறினார். 

_________________________________________________________

முன்வரிசையில் இறக்க கோரிக்கை 

டெல்லிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்காக இறுதிக்கட்டத்தில் போராடிய டோனி அதிரடியாக ஆடி 16 பந்தில் 37 ரன் எடுத்தார். இதில் 4 போர் மற்றும் 3 சிக்ஸ் அடங்கும். இந்நிலையில், அதிரடியாக ஆடும் டோனி பேட்டிங் வரிசையில் மேலே வந்து அதிக பந்துகளை எதிர்கொண்டு அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரட் லீ கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, அவர் துருப்பிடித்தது போல் விளையாடவில்லை. பேட்டிங்கை பொறுத்த வரை நான் அவரிடமிருந்து அதிகம் விரும்புகிறேன். அவர் சிறந்தவர். அவரது மூளை இன்னும் நன்றாகவும் கூர்மையாகவும் இருக்கிறது. எனவே சி.எஸ்.கே நிர்வாகம் எம்.எஸ் டோனியை பேட்டிங் வரிசையில் மேலே இறக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து