முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகி-2’வுக்காக நான் காத்திருக்கிறேன் - பார்த்திபன் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2024      சினிமா
Alagi-2 2024-04-02

Source: provided

அழகி படம் 22 ஆண்டுகள் கடந்து மீண்டும் தற்போது டிஜிட்டல் முறையில் மெருகேற்றி திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது

விழாவில் பேசிய நடிகை தேவயானி,  “22 வருடம் கழித்து மீண்டும் எங்கள் படம் ரிலீஸாவது ஒரு மகிழ்ச்சியான தருணம். 22 வருடங்களுக்கு முன்பு இந்த படத்தில் நடிக்கும் போது இப்படி மீண்டும் ஒருமுறை ரீலீஸ் ஆகும் என அப்போது நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவே இல்லை. உண்மையிலேயே இது நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு மிராக்கிள். அப்போதும் நடந்தது.. இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.

இது நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய ஒரு சந்தோஷ தருணம். ஒரு திரைப்படம் தயாரிப்பது பிரசவம் போல தான்.. 22 வருடத்திற்கு முன்பு ஒரு படத்தை சிரமப்பட்டு தயாரித்து அதை வெளியிட்டு வெற்றி பெற்ற பின்னர், இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் அந்த படத்தை மறுபடியும் ரிலீஸ் செய்கிறார் என்றால் நிச்சயமாக தயாரிப்பாளருக்கு ஒரு ஹேட்ஸ் ஆப். நன்றி என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து