முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் : 2 தளபதிகள் உயிரிழப்பு

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2024      உலகம்
Syria 2024-04-02

Source: provided

டெக்ரான் : சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் தூதரகம் பலத்த சேதம் அடைந்துள்ளது. மேலும் இந்த தாக்குதலின் போது தூதரகத்தில் இருந்த இரண்டு ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டனர். 

இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா (லெபனான்) அமைப்புகள் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. அதே போல் ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சி குழுவும் இஸ்ரேல் நோக்கு ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. 

சிரியாவில் இருந்தும் ஈரான் ஆதரவு பெற்ற குழு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது. இதனால் இஸ்ரேல் அருகில் உள்ள லெபனான், சிரியா, ஏமன் நாட்டில் செயல்பட்டு வரும் குழுக்களை குறிவைத்து வான்தாக்குதல் நடத்தி வருகிறது. 

அந்த வகையில் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் தூதரகம் பலத்த சேதம் அடைந்துள்ளது. தாக்குதலின் போது தூதரகத்தில் இருந்த இரண்டு ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 

அதில் ஒருவர் முகமது ரீசா ஜஹேதி என்பவர் ஆவார். இவர் லெபனானில் குவாத்தை படையை வழிநடத்திச் சென்ற முக்கிய தளபதி ஆவார். 2016 வரை சிரியாவில் பணயாற்றியுள்ளார். இவருடன் துணை தளபதி முகமது ஹதி ஹஜ்ரியாஹிமி-யும் கொல்லப்பட்டுள்ளார். அத்துடன் 5 அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர். 

ஈரான் தளபதி உடன் ஹிஸ்மில்லா உறுப்பினர் ஒருவரும் உயிரிழந்து உள்ளார். தூதரக பாதுகாப்பில் இருந்த இரண்டு போலீசார் காயம் அடைந்துள்ளனர். தூதரகத்தின் முக்கிய கட்டிடம் தாக்கப்படவில்லை எனவும், அதில் ஈரான் தூதர அதிகாரிகளின் வீடுகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தூதர் ஹொசைன் அக்பாரி உறுதியளித்துள்ளார். ஈரான் இதற்கு எப்படியும் பதிலடி கொடிக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து