முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் மீது 561 வழக்குகள் உள்ளன: சென்னை ஐகோர்ட்டில் அரசு தகவல்

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2024      தமிழகம்
chennai-high-court 2022-08-29

சென்னை, தமிழக எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் மீது 561 வழக்குகள் உள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற எம்.பி.க்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள குற்ற வழக்குகள் குறித்து கண்காணிக்க வேண்டும். தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் மாநில ஐகோர்ட்டுகளை வலியுறுத்தியது. அந்த வகையில் சென்னை ஐகோர்ட் இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. அது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழக எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் மீது 561 வழக்குகள் உள்ளன. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 வழக்குகள் உள்ளன. 20 ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளில் 9 வழக்குகள் சாட்சி விசாரணை முடியும் நிலையில் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் பதிவுக்காக உள்ள வழக்குகளில் விரைந்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும். புலன் விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என கோர்ட் தெரிவித்தது. மேலும் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூன் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து