முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்துக்கான தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2024      தமிழகம்
Elleesion

Source: provided

சென்னை : தமிழகத்துக்கான தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளரை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலாகியுள்ள சூழலில், அதிகளவிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை கையாளப்படுவதை தடுக்கும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. இதற்காக தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கான தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

தமிழகத்துக்கான தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளராக ஓய்வுபெற்ற இந்திய வருவாய்துறை அதிகாரி எஸ்.ஆர். பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆந்திர பிரதேசம் , கர்நாடகா, ஒடிஸா, உத்தர பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களுக்கும் தேர்தல் சிறப்பு செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல, ஆந்திர பிரதேசம், பிகார், மகாராஷ்டிரா, ஒடிஸா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 6 மாநிலங்களுக்கான தேர்தல் சிறப்பு பார்வையாளர்களும் (பொது மற்றும் காவல்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து