முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தலில் எதிரிகள் தனிதனியாக பிரிந்து வருகிறார்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2024      தமிழகம்      அரசியல்
Udhayanidhi-2024-04-2

சென்னை, பாராளுமன்ற தேர்தலில் எதிரிகள் தனிதனியாக பிரிந்து வருகிறார்கள் என்றும், ஏப்ரல் 19 ஆம் தேதி நாம் போடும் ஓட்டு பிரதமர் மோடிக்கு வைக்கும் வேட்டு என பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 

சென்னை புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பகுதியில் வடசென்னை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  திறந்தவெளி வாகனத்தில் பொதுமக்களிடையே பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது:

“இதுவரை வடசென்னைக்கு மூன்றாவது முறை வருகிறேன்.  தேர்தலுக்காக வருபவர்கள் அல்ல நாங்கள்.  உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வருபவர்கள்.  கொளத்தூர் தொகுதியில் இருந்து வரும் போது சோர்வாகவே வந்தேன்.  வரும் வழியில் கூட்டணி கட்சி தொண்டர்கள்,  திமுக தொண்டர்கள் நாம் தான் வெல்ல போகிறோம் என உற்சாகம் அளித்தனர்.  உச்சி வெயிலில் உற்சாகம் அளித்த தொண்டர்களை பாரக்கும் போதே தெரிகிறது நாம் வெற்றி பெறுவோம் என்று.  ஏப்ரல் 19 ஆம் தேதி நாம் போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு.

கடந்த முறை ஒன்றாக வந்த எதிரிகள் இந்தமுறை தனிதனியாக பிரிந்து வருகிறார்கள். கடந்த முறை 4.50 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கலாநிதி வீராசாமியை வெற்றி பெற வைத்த நீங்கள்,  தற்போது 6 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்” என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து