முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிஷா சட்டப்பேரவை தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2024      இந்தியா
BJP 2023 04 10

Source: provided

புவனேஷ்வர் : பழங்குடியின மக்கள் அதிகளவில் வசிக்கும் ஒடிஷாவில் மொத்தமுள்ள 147 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 21 மக்களவை தொகுதிகளுக்கும் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஒடிஷாவில் முதற்கட்ட வாக்குப்பதிவு மே 13-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இம்மாதம் 25-ம் தேதி கடைசி நாளாகும். இதனிடையே, ஓரணியில் இருந்த பாஜகவும் பிஜு ஜனதா தளமும் இம்முறை தனித்தனியாக போட்டியிடுகின்றன. ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் முனைப்பில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், முதற்கட்டமாக, 112 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பா.ஜ.க. தலைமை நேற்று (ஏப். 2) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரதமர் மோடி நேரடியாக ஒடிஷாவில் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து