முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரியில், பள்ளிவாசலில் இரு பிரிவினர் இடையே மோதல்

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2024      தமிழகம்
Kumai 2024-04-02

Source: provided

குமரி : குமரியில் பள்ளிவாசலில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்தனர்.

கன்னியாகுமரியில் உள்ள ஒரு முஸ்லிம் பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று மின்விளக்கு அலங்காரம் செய்யும்பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது இரு பிரிவினர்கள்இடையே திடீரென வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி சுத்தியல் மற்றும் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி கொண்டனர்.

இதில் முகைதீன் பாபு (வயது 40), செய்யது அலி (வயது 47), சாஜித் (வயது 28), சஜித் (வயது 24) மற்றும் யாசிர் (வயது 38) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த 5 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் அங்கு விரைந்து செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவியது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுஉள்ளனர்.

மோதல் தொடர்பாக கன்னியாகுமரி போலீசார் இரு பிரிவினரையும் அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மோதலில் ஈடுபட்ட சிலரை போலீசார் பிடித்து விசாரணைநடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து