முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் ஹாட்ரிக் வெற்றி

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2024      விளையாட்டு
Rajasthan-team 2024-03-29

Source: provided

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

மும்பை பேட்டிங்....

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. 

ரசிகர்கள் அதிர்ச்சி...

ரோஹித் ஷர்மா, நமன் திர், டவால்ட் பிரீவிஸ் என மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இஷான் கிஷன் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த திலக் வர்மா 32 ரன்களும், ஹர்திக் பாண்டியா 34 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது.

ரியான் பராக் அபாரம்... 

இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களும், ஜாஸ் பட்லர் 13 ரன்களும் எடுத்து வெளியேறினர். சஞ்சு சாம்சன் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரியான் பராக் பொறுப்புடன் விளையாடி, 39 பந்துகளில் 54 ரன்கள் விளாசினார். மற்றொரு புறம் ரவிச்சந்திரன் அஷ்வின் 16 ரன்கள் எடுத்து வெளியேறினார். 15.3 ஓவர்களில் இலக்கை எட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போராடுவோம்...

இந்த நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் மனம் தளராமல் தொடர்ந்து போராடுவோமென மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: மும்பை இந்தியன்ஸ் அணியைப் பற்றி ஒரு விஷயத்தை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மனம் தளர்ந்துவிட மாட்டோம். நாங்கள் தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்போம். முன்னேறிக் கொண்டே இருப்போம் எனப் பதிவிட்டுள்ளார்.

புள்ளிகள் பட்டியலில் முதலிடம்

மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி வரை, ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தையும், குஜராத் மூன்றில் இரண்டில் வெற்றி பெற்று (ரன்ரேட்) 4-வது இடத்தையும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மூன்றில் ஒரு வெற்றி பெற்று ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. லக்னோ 2 போட்டியில் ஒன்றில் வெற்றி பெற்று ஆறாவது இடத்தையும் (ரன்ரோட்), டெல்லி கேப்பிட்டல்ஸ் மூன்றில் ஒரு வெற்றி மூலம் 7-வது இடத்தையும், பஞ்சாப் எட்டாவது இடத்தையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 9 இடத்தையும், மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து மும்பை இந்தியன்ஸ் கடைசி இடத்தையும் பிடித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து