முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க.வில் இணைவதாக நடிகை சுமலதா அறிவிப்பு : பார்லி. தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு

புதன்கிழமை, 3 ஏப்ரல் 2024      இந்தியா
Sumalatha 2024-04-03

Source: provided

பெங்களூரு : பா.ஜ.க.வில் இணைவதாக நடிகை சுமலதா அறிவித்துள்ளார். வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

கர்நாடகத்தில் உள்ள மாண்டியா தொகுதி எம்.பி.யாக இருப்பவர் நடிகை சுமலதா. பா.ஜ.க. ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதனால், வரும் தேர்தலிலும் சுமலதாவுக்கு பா.ஜ.க. ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், மாண்டியா தொகுதியை மதசார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ஒதுக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று நேற்று நடிகை சுமலதா அறிவித்துள்ளார். அதனால், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் குமாரசாமியை ஆதரிப்பதாக மண்டியா தொகுதி மக்களவை தொகுதி உறுப்பினர் நடிகை சுமலதா நேற்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாண்டியா தொகுதியில் உள்ள காளிகாம்பா கோவிலில் ஆதரவாளர்களுடன் நடந்த கூட்டத்தில் நடிகை சுமலதா பேசுகையில், சுயச்சை வேட்பாளராக போட்டியிட்ட தன்னை வெற்றி பெற செய்த மாண்டியா மக்களை எப்போதும் மறக்க மாட்டேன். விரைவில் பா.ஜ.க.வில் இணைகிறேன்; எப்போதும் போல உங்களின் ஆதரவு வேண்டும் என்று தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து