முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் : சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல்

புதன்கிழமை, 3 ஏப்ரல் 2024      இந்தியா
TN 2023-04-06

Source: provided

புதுடெல்லி : வெள்ள பாதிப்புகளுக்கு, இடைக்கால நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

வேலூர் மாவட்டம் கோட்டை மைதானத்தில் தி.மு.க. கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் கதிர் ஆனந்த் (வேலூர்), ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்) ஆகியோரை ஆதரித்து, தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "நாமும் வெள்ள நிவாரணம் கேட்டுக்கேட்டு பார்த்தோம். தரவில்லை. இன்று (நேற்று) காலை சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு போடப்போகிறோம்" என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

தென்மாவட்டங்கள் மற்றும் சென்னை வெள்ள பாதிப்புகளுக்கு, இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. ஏற்கெனவே வெள்ள நிவாரணம் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ள நிவாரணத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு  உரிய நிதியை வழங்க  மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணை வர உள்ளது.

கடந்த ஆண்டு இறுத்தியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுபோல், தூத்துக்குடி, திருநெல்வேலி தென்காசி, மாவட்டங்களீள் வரலாறு காணாத மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் வெள்ள பாதிப்பு குறித்து கடிதம் எழுதி, ரூ. 30 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டார். ஆனால் நிவாரணம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து