முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த பிரபல மலையாள நடிகர் சுஜித் ராஜேந்திரன் மரணம்

புதன்கிழமை, 10 ஏப்ரல் 2024      சினிமா
Sujith-Rajendran 2024-04-10

Source: provided

திருவனந்தபுரம் : பிரபல மலையாள நடிகர் சுஜித் ராஜேந்திரன், எர்ணாகுளத்தில் ஆலுவா - பரவூர் சாலையில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

நடிகர் சுஜித் ராஜேந்திரன் துபாயில் பிறந்தவர். அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். திரைத்துறையில் இருந்த ஆர்வத்தால் கேரளாவிற்கு வந்து படத்தில் நடிக்க ஆரம்பித்தார். மேலும், அவர் பாடுவதிலும் நடனமாடுவதிலும் சிறந்தவர். 

இவர் 2018-ம் ஆண்டு வெளிவந்த கினாவல்லி படத்தில் திரைத்துறையில் அறிமுகமானார். மேலும் அப்படத்தில் ஒரு பாடலும் பாடியுள்ளார். சன்னி லியோன் நடித்த மாரத்தான் மற்றும் ரங்கீலா படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவரது உயிரிழப்பு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து