முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் 4-ம் தேதி நடக்க இருந்த ஓ.பி.எஸ். மாநாடு ஒத்திவைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 31 ஆகஸ்ட் 2025      தமிழகம்
OPS 2025-08-17

Source: provided

சென்னை : மதுரையில் வருகிற 4-ம் தேதி நடக்க இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த மாதம் 14-ம் தேதி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சிக்க வேண்டாம் என்றும் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்தால் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் ஆதரவாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியதாக கூறப்பட்டது.

இதனிடையே அந்த ஆலோசனை கூட்டத்தில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “அ.தி.மு.க.வை மீட்டெடுப்பதற்கான சட்ட போராட்டம் தொடரும். சட்ட போராட்டத்தில் உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி. அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தவே தர்மயுத்தம் நடத்தி கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் நம்முடைய நோக்கத்தை வென்றெடுப்போம். மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள் மட்டுமே முதல்-அமைச்சராக முடியும். எடுத்துள்ள சில முடிவுகளை வெளியே சொல்ல முடியாது. அது என்ன என்பது குறித்து உங்களுக்கு தெரியும். எனது தலைமையில் வருகிற செப்டம்பர் மாதம் 4-ந் தேதி மதுரையில் மாநில மாநாடு நடத்தப்படும். எதிர்காலத்தில் நாம் என்ன முடிவுகளை எடுக்கப்போகிறோம் என்பது குறித்து மதுரை மாநாட்டில் அறிவிப்பேன்” என்று கூறி இருந்தார்.

இந்நிலையில் செப்டம்பர் 4-ம் தேதி மதுரையில் நடைபெற இருந்த ஓ.பன்னீர் செல்வம் அணியின் மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 

வருகிற 14-ம் தேதி அன்று சென்னை, வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் நடைபெற்ற தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க 4-09-2025 அன்று மதுரையில் நடைபெறுவதாக இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் மாநில மாநாடு கழக உயர்மட்டக் குழு ஆலோசனையின்படி ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து