முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டின் பொறுப்பு டி.ஜி.பி.யாக ஜி.வெங்கட்ராமன் நியமனம்

ஞாயிற்றுக்கிழமை, 31 ஆகஸ்ட் 2025      தமிழகம்
DGP 2025-08-30

Source: provided

சென்னை : தமிழகத்தின் காவல் துறை தலைமை இயக்குநராக (பொறுப்பு ) ஜி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக டி.ஜி.பி.யாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, பொறுப்பு டி.ஜி.பி.யாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜி. வெங்கட்ராமன், 1994 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வானவர்.

இளங்கலை பொருளாதாரம், முதுகலை பொது நிர்வாகம் முடித்த இவர், 1996 ஆம் ஆண்டு திருச்செந்தூரில் பணியைத் தொடங்கினார்.

1996 -ல் உதவி காவல் கண்காளிப்பாளராக (ஏஎஸ்பி) திருச்செந்தூரில் பணியாற்றினார். 1997-ல் கோவில்பட்டி, ராமநாதபுரம் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.

1998 ஆம் ஆண்டு காவல் கண்காணிப்பாளரனதும் மத்திய அரசின் உளவுப் பிரிவு பணிக்குச் சென்று, தமிழகம் திரும்பினார். 2001 ஆம் ஆண்டு சென்னை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். 2008 ஆம் ஆண்டு டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார்.

2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் சிபிசிஐடி டிஐஜியாக இருந்தார். 2012-ல் ஐஜியாக பதவி உயர்வு பெற்றார். 2019ஆம் ஆண்டு ஏடி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று, சைபர் கிரைம், தலைமையகம், நிர்வாகப் பணிகளில் பணியாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து