முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். வரலாற்றில் கோலியின் சாதனையை தகர்த்த சுப்மன் கில்

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2024      விளையாட்டு
Subman-Gill 2023-09-06

Source: provided

ஜெய்ப்பூர்:ஐ.பி.எல். வரலாற்றில் விராட் கோலியின் மாபெரும் சாதனையை தகர்த்துள்ளார் சுப்மன் கில்.

இருவரும் அரை சதம்... 

ஐ.பி.எல். தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 196 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சஞ்சு சாம்சன், பராக் இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து திரில் வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக கில் 72 ரன்கள் அடித்து அசத்தினார்.

3 ஆயிரம் ரன்கள்...

முன்னதாக இந்த போட்டியில் சுப்மன் கில் 27 ரன்கள் அடித்திருந்தபோது ஐ.பி.எல். தொடரில் 3000 ரன்களை பதிவுசெய்தார். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் 3000 ரன்கள் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் மாபெரும் சாதனையை தகர்த்த கில் புதிய சாதனையை படைத்துள்ளார். கோலி தன்னுடைய 26 வயதில்தான் 3000 ரன்களை அடித்தார். ஆனால் கில் 24 வயதிலேயே 3000 ரன்களை அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

சாதனை பட்டியல்:

1. சுப்மன் கில் - 24 வருடங்கள் 215 நாட்கள்.

2. கோலி - 26 வருடங்கள் 186 நாட்கள்.

3. சஞ்சு சாம்சன் - 26 வருடங்கள் 320 நாட்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து