முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் இருந்து மொரீஷியசிற்கு முதல் விமான சேவை தொடங்கியது

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024      தமிழகம்
Air-India

Source: provided

சென்னை : சென்னையில் இருந்து மொரீஷியஸ் நாட்டிற்கு முதல் விமான சேவை நேற்று தொடங்கியது. சென்னை விமான நிலையத்தில் இருந்து 173 பயணிகளுடன் முதல் விமானம் அதிகாலை புறப்பட்டு சென்றது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2020-ம் முதல் சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து தொற்றின் பரவல் குறைந்து இயல்பு நிலை திரும்பியதை அடுத்து படிப்படியாக விமான சேவைகள் மீண்டும் துவங்கியது.

இருந்த போதிலும் ஹாங்காங் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளுக்கு விமான சேவைகள் தொடங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து 4 ஆண்டுகளுக்கு பின்னர் ஹாங்காங் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளுக்கு மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்படும் என கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் சென்னை – ஹாங்காங் இடையிலான விமான சேவை தொடங்கியது. இந்நிலையில், சென்னை – மொரீஷியஸ் இடையிலான விமான சேவைகள் நேற்று மீண்டும் தொடங்கியுள்ளது. 

அதன்படி, சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து 173 பயணிகளுடன் முதல் விமானம் நேற்று அதிகாலை மொரீஷியசுக்கு புறப்பட்டுச் சென்றது. 

சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து வாரந்தோறும் சனிக்கிழமை ஒரு விமானம் மொரீஷியசுக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் மொரீஷியஸ் தற்போது மும்பையில் இருந்து வாரத்திற்கு 6 முறையும், டெல்லியில் இருந்து வாரத்திற்கு 3 முறையும் விமான சேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து