முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சகோதரர் ராகுல் காந்திக்கு ஜூன் 4-ல் இனிப்பான வெற்றியை தருவோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவு

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024      தமிழகம்
Stelin 2022 03 05

Source: provided

சென்னை : சகோதரர் ராகுல் காந்திக்கு ஜூன் 4-ல் இனிப்பான வெற்றியை தருவோம் என்று முதல்வர் மு.க .ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திருநெல்வேலியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். 

அப்போது, பொதுக்கூட்டத்துக்கு செல்லும் வழியில் காரை நிறுத்திய ராகுல் காந்தி, சாலையை கடந்து பேக்கிரி ஒன்றுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்காக இனிப்புகளை வாங்கினார். பிறகு, பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ராகுல் காந்தி, தான் வாங்கிய இனிப்பை வழங்கி அன்பை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில், என்னுடைய சகோதரர் ராகுல்காந்தி இனிப்பு வழங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என முதல்வர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் ராகுல்காந்தி தனக்கு இனிப்பு வாங்கி வந்த வீடியோவை பகிர்ந்து முதல்வர் மு.க.ஸ்டலின் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில்,  அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்! என்னுடைய சகோதரர் ராகுல்காந்தி இனிப்பு வழங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஜூன் 4ம் தேதி இண்டியா கூட்டணி ராகுலுக்கு இனிப்பான வெற்றியை தருவோம். இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து