முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் எல்.சி.டி. திரை உள்ளிட்ட வசதிகளுடன் 138 ஓட்டுநர் இல்லா ரயில்கள் இயக்கம்

சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2024      தமிழகம்
Metro 2024-01--02

Source: provided

சென்னை : சென்னையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், 138 ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள், எல்.சி.டி. திரைகள் மூலம் இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு முதல், சென்னையில் விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. 

ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதை தொடர்ந்து தற்போது ரூ. 63,246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணி நடைபெறுகிறது.

இதில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைய உள்ளன. 

இதில் உயர்மட்ட பாதை, சுரங்கப் பாதையில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. உயர்மட்ட பாதைக்காக தூண்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில் 43 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் 48 ரயில் நிலையங்கள் இடம் பெறுகின்றன. இதில் 3 நிலையங்கள் மிக தாழ்வாக அமைக்கப்பட உள்ளது.

இந்நிலையில் 2-ம் கட்ட திட்டத்தில் ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி ஓட்டுநர் இல்லா ரயில்களின் 2025-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் இயக்கப்பட உள்ளது. 3 பெட்டிகள் கொண்ட 138 ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சென்னை மாவட்டத்தில் மாதவரம் முதல் சிப்காட் (காரிடார் 3), லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி (காரிடார் 4) மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் (காரிடார் 5) காரிடர்களுக்கு இந்த ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்கள் வாங்கப்பட உள்ளது. 

இந்த ரயில்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ஜி.பி.எஸ், சிக்னல் ரீடிங், டைமிங் சீகுவென்ஸ் ஆகிய பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாக வைத்து இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் அனைத்தும் பொது பயன்பாட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு ஒரு வருடத்திற்கு விரிவான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஒரு மாதத்தில் இந்த ரயில்கள் தயார் செய்யப்பட்டு அதன்பின் சோதனை முயற்சிகள் அனைத்தும் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் பூந்தமல்லி மற்றும் போரூர் இடையே இயக்கப்படும் ஓட்டுனர் இல்லாத 26 ரயில்களின் முதல் பேட்ச் அடுத்த ஆண்டு மத்தியில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து