எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான் பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகள் படைத்து வரும் இவர் பல இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக உள்ளார். களத்தில் இவர் காட்டும் ஆக்ரோஷத்தின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் இவரது புகழை சிறப்பிக்கும் விதமாக உலக பாரம்பரிய தினத்தை (ஏப்ரல் 18) முன்னிட்டு மெழுகால் ஆன விராட் கோலியின் முழு உருவ சிலையை நிறுவவுள்ளதாக ஜெய்ப்பூர் அருங்காட்சியகம் அறிவித்துள்ளது. விராட் கோலியின் உருவ சிலையை நிறுவ குழந்தைகளும் இளைஞர்களும் கோரிக்கை வைத்து வந்த நிலையில், 35 கிலோ எடையில் 5.9 அடி உயரத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
______________________________________________________
டோனிக்கு ரகானே புகழாரம்
டோனி இருப்பதால் அனைத்து மைதானங்களிலும் தங்களுக்கு சொந்த மைதானத்தைப் போன்ற ஆதரவு கிடைப்பதாக ரகானே கூறியுள்ளார். அத்துடன் 2011-ல் இந்தியாவுக்காக அறிமுகமானபோது என்ன சொன்னாரோ அதே ஆலோசனையை சென்னை அணிக்காக அறிமுகமானபோதும் டோனி தம்மிடம் கூறியதாக தெரிவிக்கும் ரகானே இது பற்றி பேசியது பின்வருமாறு:- "எங்கே பயணம் செய்தாலும் மஹி பாய் எனும் ஒரே ஒருவரால் நாங்கள் சொந்த மண்ணில் விளையாடுவது போன்ற சூழ்நிலையை பெறுகிறோம். அது அற்புதமான உணர்வு. அவருடன் சேர்ந்து விளையாடும்போது உங்களால் ஒரு வீரராகவும் மனிதராகவும் நிறைய கற்றுக் கொள்ள முடியும். தற்போது பல மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் சி.எஸ்.கே. அணியில் விளையாடுகின்றனர். அந்த சூழ்நிலை மிகவும் சிறப்பாக உள்ளது.
2011-ல் மான்செஸ்டரில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான நான் பயிற்சியை முடித்தேன். அப்போது என்னிடம் வந்த டோனி "இத்தனை நாட்களாக எப்படி விளையாடினீர்களோ அதே ஆட்டத்தை இப்போதும் களத்திற்கு சென்று வெளிப்படுத்துங்கள்" என்று சொன்னது இன்று வரை என்னுடன் ஒட்டிக் கொண்டுள்ளது. சொல்லப்போனால் சி.எஸ்.கே. அணியிலும் "உங்களுடைய ஆட்டத்தை மட்டும் விளையாடுங்கள். எந்த அழுத்தத்தையும் சேர்க்காதீர்கள்" என்று அதே வார்த்தையைத்தான் அவர் என்னிடம் சொன்னார். அந்த வகையில் மிகவும் எளிமையாக இருந்து ஒவ்வொருவருக்கும் ஆதரவு கொடுப்பதாலேயே அவர் மகத்தானவராக போற்றப்படுகிறார்" என்று கூறினார்.
______________________________________________________
அவரை அடித்திருப்பேன்: ஹர்பஜன்
லக்னோவுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் துவக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா 22 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஒரு கட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடி வந்த அவர் பவர்பிளே முடிந்ததும் ரவி பிஷ்னோய் ஓவரில் தேவையில்லாத ஷாட்டை விளையாடி ஆட்டமிழந்தது அந்த அணிக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரது இந்த இன்னிங்ஸை கடுமையாக விமர்சித்துள்ள ஹர்பஜன் சிங் கூறுகையில்.,
களத்தில் ப்ரித்வி ஷா என்ன செய்து வருகிறார் என்பதை அனைவரும் கவனிக்க வேண்டும். நான் மட்டும் டெல்லி அணியின் நிர்வாகத்தில் இருந்திருந்தால் நிச்சயம் பிரித்வி ஷாவை அடித்திருப்பேன். ஏனெனில் ஒரு நல்ல இன்னிங்ஸ் ஆரம்பிக்கும்போது அதனை பெரிய இன்னிங்சாக மாற்ற வேண்டும். அதை விட்டுவிட்டு தேவையில்லாத ஷாட்டை விளையாட வேண்டிய அவசியமே கிடையாது. எப்போதுமே அவர் நன்றாக பேட்டிங் செய்யும்போது ஒரு மோசமான ஷாட்டை விளையாடி ஆட்டமிழப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அதனை ப்ரித்வி ஷா மாற்றிக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
______________________________________________________
ஆஸி., வீரர் குறித்து கோலி
கடந்த 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கினார். ஆனால் அப்போட்டியில் கோலி சந்தித்த முதல் பந்தையே மிட்செல் ஜான்சன் பவுன்சராக வீசினார். இளம் வீரராக இருந்த விராட் கோலி அதை சரியாக கணிக்கத் தவறி தலையில் அடி வாங்கி கீழே விழுந்தார்.இந்நிலையில் அப்போட்டியில் ஜான்சன் வீசிய பவுன்சரால் தம்முடைய ஒரு கண் பார்வை மங்கும் அளவுக்கு கலங்கிப்போனதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். அதனால் எவ்வளவு தைரியம் இருந்தால் இவர் என்னை அடிப்பார் என்ற வெறியுடன் மீண்டும் பேட்டிங் செய்து ஜான்சனுக்கு பதிலடி கொடுத்ததாக தெரிவிக்கும் விராட் கோலி இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.:- "அந்த சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியின் முதல் பந்திலேயே ஜான்சன் என்னுடைய தலையில் அடித்தார். அதை என்னால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை.
அந்த தொடரில் இப்படி விளையாடுவோம் அப்படி பேட்டிங் செய்வோம் என்று 2 மாதங்களாக நான் கனவு கண்டு வைத்திருந்தேன். ஆனால் முதல் பந்திலேயே தலையில் அடி வாங்கியதால் என்னுடைய மொத்த திட்டத்தையும் மாற்றினேன். அந்த அடியால் எனது இடது கண் வீங்க தொடங்கியதால் பார்வை குறைய துவங்கியது. அதை நான் அப்போது கவனிக்கவில்லை. இருப்பினும் உணவு இடைவெளிக்கு முன் அவ்வாறு நடந்ததற்காக நான் நன்றியுடையவனாக இருக்கிறேன். ஏனெனில் அதன் காரணமாக சண்டையிட வேண்டும் அல்லது விமானத்தில் வீடு திரும்ப வேண்டும் என்ற 2 விருப்பங்கள் மட்டுமே என்னிடம் இருந்தன. அப்போது "என் தலையில் அடிக்க அவருக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? இவரை நான் அடித்து நொறுக்குவேன்" என்பதே என்னுடைய ரியாக்சனாக இருந்தது. கடைசியில் அதையே செய்தேன்" என்று கூறினார்.
______________________________________________________
தோல்வி குறித்து கே.எல்.ராகுல்
டெல்லிக்கு எதிரான போட்டியில் தோல்வி குறித்து லக்னோ அணியின் கே.எல் ராகுல் கூறுகையில்., "இந்த போட்டியில் நாங்கள் 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டோம். நல்ல துவக்கம் இருந்தும் எங்களால் அதனை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் போனது. 180 ரன்கள் வரை அடித்திருந்தால் வெற்றிக்கு போதுமான ஸ்கோராக இருந்திருக்கும். இந்த மைதானத்தில் உள்ள தன்மையை பயன்படுத்தி குல்தீப் யாதவ் எங்கள் அணியின் முக்கிய வீரர்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்க வைத்துவிட்டார்.
அதேபோன்று டெல்லி அணி சார்பாக ஜேக் பிரேசர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அனைத்து பந்துகளையும் அவர் அடித்து ஆடவே நினைத்தார். அவரது இந்த இன்னிங்ஸ் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதேபோன்று பவர்பிளேவிலேயே வார்னர் விக்கெட்டை நாங்கள் வீழ்த்தி விட்டோம். மேலும் பவர்பிளேவிற்கு பிறகு இரண்டாவது விக்கெட்டையும் வீழ்த்தி விட்டோம். ஆனால் ரிஷப் பண்ட் மற்றும் ஜேக் பிரேசர் ஆகியோர் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து எங்களிடம் இருந்து ஆட்டத்தை பறித்தனர். ஜேக் பிரேசர் கேட்சை தவறவிட்டது பெரிய இழப்பாக மாறியது" என்று கூறினார்.
______________________________________________________
அரையிறுதியில் ஜோகோவிச், ரூட்
களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது. இதில் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீரர் டி மினாருடன் மோதினார். இதில் ஜோகோவிச் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதியில் ஜோகோவிச், நார்வே வீரர் காஸ்பர் ரூடுடன் மோதுகிறார். மற்றொரு அரையிறுதியில் சிட்சிபாஸ், சின்னருடன் மோதுகிறார்.
______________________________________________________
இந்தியா ஒயிட்வாஷ் ஆகி ஏமாற்றம்
இந்திய ஹாக்கி அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தது. முதல் நான்கு போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 1-5, 2-4, 1-2, 1-3 எனத் தோல்வியடைந்திருந்தது. இந்த நிலையில் நேற்று 5-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று எப்படியாவது ஒயிட்வாஷ் ஆவதை தடுக்க இந்தியா முயற்சித்தது. இருந்த போதிலும் 2-3 எனத் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.
ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் இந்திய அணி கேபடன் ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்தார். ஆனால் ஆஸ்திரேலியா 20-வது, 38-வது மற்றும் 53-வது நிமிடத்தில் அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்தது. 53-வது நிமிடத்தில் பாபி சிங் தாமி ஒரு கோல் அடித்தார். அதன்பின் இந்திய வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 2-3 எனத் தோல்வியைத் தழுவியது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நெருங்கும் நேரத்தில் இந்த தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. என்றபோதிலும் இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
100 நாள் வேலை திட்ட நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
25 Mar 2025புதுடெல்லி : 100 நாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
-
செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 வடமாநில இளைஞர்கள் சென்னை ஏர்போர்ட்டில் கைது
25 Mar 2025சென்னை : சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
-
பஸ் பின்னால் ஓடிய மாணவி: அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்
25 Mar 2025திருப்பத்தூர் : அரசு பஸ் பின்னால் பிளஸ்-2 மாணவி ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் டிரைவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
-
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - காவலாளி பலி
25 Mar 2025மும்பை, மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது இதில் காவலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
சூடான்: மதவழிபாட்டு தலம் மீது துணை ராணுவம் தாக்குதல் 5 பேர் பலி
25 Mar 2025கார்டூம், சூடானில் மதவழிபாட்டு தலம் மீது துணை ராணுவம் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்
25 Mar 2025சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டதால் தமிழக அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை தமிழகத்தில் நீக்கப்படுமா? சட்டசபையில் விவாதம்
25 Mar 2025சென்னை, தமிழகத்தில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுமா? என்பது குறித்து சட்டசபையில் விவாதம் நடந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-03-2025.
25 Mar 2025 -
கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை தமிழகத்தில் நீக்கப்படுமா? சட்டசபையில் விவாதம்
25 Mar 2025சென்னை, தமிழகத்தில் கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுமா? என்பது குறித்து சட்டசபையில் விவாதம் நடந்தது.
-
100 நாள் வேலை திட்ட நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
25 Mar 2025புதுடெல்லி : 100 நாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
-
100 நாள் வேலை திட்ட நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
25 Mar 2025புதுடெல்லி : 100 நாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
-
அமெரிக்காவில் கேளிக்கை விடுதியில் திடீர் துப்பாக்கி சூடு; 6 பேர் படுகாயம்
25 Mar 2025வாஷிங்டன், அமெரிக்காவில் உள்ள கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
டெல்லி சட்டப்பேரவையில் 1 லட்சம் கோடி ரூபாயில் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் ரேகா குப்தா
25 Mar 2025புதுடெல்லி : டெல்லி சட்டசபையில் ரூ.1 லட்சம் கோடியில் பட்ஜெட்டை முதல்வர் ரேகா குப்தா தாக்கல் செய்தார்
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப்பதிவு
25 Mar 2025சென்னை : மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
அமைச்சரை "முறை" வைத்து அழைத்த எம்.எல்.ஏ.வால் அவையில் சிரிப்பலை!
25 Mar 2025சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜியை மாப்பிள்ளை என அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குறிப்பிட்டதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
-
டெல்லி சட்டப்பேரவையில் 1 லட்சம் கோடி ரூபாயில் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் ரேகா குப்தா
25 Mar 2025புதுடெல்லி : டெல்லி சட்டசபையில் ரூ.1 லட்சம் கோடியில் பட்ஜெட்டை முதல்வர் ரேகா குப்தா தாக்கல் செய்தார்
-
திருப்பதி கோயிலில் ரூ.5,258 கோடியில் பட்ஜெட்
25 Mar 2025திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரவு செலவுடன் கூடிய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
-
டெல்லி சட்டப்பேரவையில் 1 லட்சம் கோடி ரூபாயில் பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் ரேகா குப்தா
25 Mar 2025புதுடெல்லி : டெல்லி சட்டசபையில் ரூ.1 லட்சம் கோடியில் பட்ஜெட்டை முதல்வர் ரேகா குப்தா தாக்கல் செய்தார்
-
ஆன்லைன் விளம்பரங்களுக்கான டிஜிட்டல் சேவை வரி ரத்தாகிறது
25 Mar 2025புதுடெல்லி : ஆன்லைன் விளம்பரங்களுக்கான டிஜிட்டல் சேவை வரியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது
-
ஆப்பிரிக்க நாடுகளுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியில் இந்திய ராணுவம்
25 Mar 2025டெல்லி, ஆப்பிரிக்கநாடுகளுடன் சேர்ந்து கூட்டு ராணுவ பயிற்சியில் இந்தியா ஈடுபடும் என்று கூறப்பட்டுள்ளது.
-
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா போராட்டம்
25 Mar 2025புதுடில்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்க
-
பிரபல கராத்தே பயிற்சியாளர் ஷிகான் ஹூசைனி காலமானார்
25 Mar 2025சென்னை, பிரபல கராத்தே பயிற்சியாளரும், நடிகருமான ஷிகான் ஹூசைனி காலமானார்.
-
டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து 2 நீதிபதிகள் விலகல்
25 Mar 2025சென்னை : டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து 2 நீதிபதிகள் விலகியுள்ளனர்.
-
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை சந்திக்க 5 பேர் கொண்ட குழு பயணம்
25 Mar 2025ராமேசுவரம், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை சந்திக்க 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று புறப்பட்டு சென்றனர்.
-
100 நாள் வேலை திட்ட நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
25 Mar 2025புதுடெல்லி : 100 நாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.