முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடாவில் அரியானா மாநிலத்தை சேர்ந்த மாணவர் சுட்டுக்கொலை

ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2024      உலகம்
Canada 2024-04-14

Source: provided

ஒட்டாவா : கனடாவில் இந்திய மாணவன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சிரங் அன்டில் (24). இவர் கனடாவில் வசித்து வருகிறார். கனடாவில் உள்ள பல்கலைக் கழகத்தில் எம்.பி.ஏ. கல்வி பயின்று வருகிறார். இந்நிலையில், இவர் கனடாவின் வென்கவெர் நகரில் தங்கி கல்வி பயின்று வருகிறார். 

சிரங் அன்டில் கடந்த 13-ம் தேதி வென்கவெர் நகரின் கிழக்கு 55-வது அவன்யூ பகுதியில் தனது சொகுசு காரில் பயணித்தார். அப்பகுதியில் முக்கிய தெருவில் இரவு 11 மணியளவில் சிரங் அன்டில் காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. 

இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், சாலையோரம் நின்று கொண்டிருந்த சொகுசு காரை பரிசோதித்தனர். 

அப்போது அந்த காரில் சிரங் அன்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து சிரங்கின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், சிரங்கை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது யார்? அல்லது சிரங் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கனடாவில் இந்திய மாணவன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து